கோலாலம்பூர், செப்டம்பர்.03-
ஆப்கானிஸ்தானை உலுக்கிய நில நடுக்கத்தில் அதிகமானோர் உயிரிழந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியிருப்பது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவுச் செய்துள்ளார்.
இதே போன்று ஆப்பிரிக்க நாடான சூடானில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பது குறித்தும் டத்தோ ஶ்ரீ தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்விரு இயற்கைச் சீற்றங்களிலும் தங்களின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ள குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அவ்விரு நாடுகளில் துயரத்தில் மலேசியாவும் பங்கு கொள்வதாக தமது முகநூலில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.








