பத்துகேவ்ஸ், ஆகஸ்ட்.30-
பத்துகேவ்ஸ் தொழிற்பேட்டைப் பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அழிந்தது.
இந்தத் தீ விபத்து குறித்து காலை 8.59 மணிக்குத் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
செலாயாங், ரவாங், கோம்பாக் செலாத்தான், சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா ஆகிய 5 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 31 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மரத்தளவாடங்கள் என்பதால் தீயின் ஜுவாலைக் கடுமையாக இருந்ததாகவும், தீ அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பரவாமல் இருக்க முழு பலத்துடன் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.








