வான் பயண நிறுவனங்கள் தங்கள் வானூர்திகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், பயணச் சீட்டுகளின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இவ்வாறு செய்வ்தால், அதிகமானப் பயணச் சேவைகள் வழங்கப்படுவதோடு பயணச் சீட்டுகளின் விலையும் குறைவாகவே இருக்கும் என்றார்.
மேலும், வான் பயணச் சீட்டுகளின் விலையானது அமெரிக்க நாணயத்தின் மதிப்பு அதிகரிப்பு, அனைத்துலக நிலையில் எண்ணெய் விலை அதிகரிப்பு, வானூர்தி வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது என்று அந்தோணி லோக் விளக்கினார்.








