கோல லங்காட், அக்டோபர்.17-
கோல லங்காட் மாவட்டம் தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம், சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலான காணொளி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அப்பள்ளியின் ஆசிரியர்களும், அம்மாணவர்களின் பெற்றோர்களும், கலந்து பேசி இப்பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக கோல லங்காட் காவல்துறைத் தலைவர் முகமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்துள்ளார்.
இதனால், அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.