Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

Share:

பட்டர்வொர்த், மார்ச்.22-

பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் மார்பில் குத்துக் காயத்துடன் தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்பதை அம்மாநில போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் எந்த குற்றச் செயல்களும் இல்லை என்றும், இது திடீர் மரணமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது சுங்கை டுவா, தாமான் டேசா முர்னி பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.

Koay Feu Chuen என்ற தொழிற்சாலை ஊழியர், இருமாடி வீட்டின் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டறியப்பட்டார்.

மனநல சிகிச்சை பெற்று வந்ததாக நம்பப்படும் Koay Feu, வழக்கமாகக் காலை உணவு தயாரிக்க கீழே வராததால் சந்தேகமடைந்த அவரது கணவர், அறைக்குச் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

Related News

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்:... | Thisaigal News