ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போதைப்பொருளுடன் நடைபெற்ற விருந்து உபசரிப்பு தொடர்பில் சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை புக்கிட் மெர்தாஜம், Juru வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் Tan Cheng San தெரிவித்தார்.
இதில் சீன நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் பிடிபட்ட வேளையில் வியட்நாமைச் சேர்ந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 5 ஆயிரத்து 850 வெள்ளி பெறுமானமுள்ள 117 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக Tan Cheng San தெரிவித்தார்.








