Oct 12, 2026
Thisaigal NewsYouTube

அந்த ஆப்பிரிக்கப் பிரஜை போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த ஆப்பிரிக்கப் பிரஜை போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

போலீஸ்காரர் ஒருவரைக் கடித்து, இடது காதைத் துண்டித்த ஆப்பிரிக்கப் பிரஜை, போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுகார்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.

நேற்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர், கெப்போங், மெட்ரோ பிரிமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பிடிப்பட்ட 38 வயதுடைய அந்த ஆப்பிரிக்கப் பிரஜையை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று ஏசிபி சுகார்னோ குறிப்பிட்டார்.

மாணவன் என்று கூறிக் கொண்ட அந்த ஆப்பிரிக்கப் பிரஜையிடம் எந்தவொரு செல்லத்தக்கப் பயண ஆவணமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி சுகார்னோ கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →