Sep 15, 2026
Thisaigal NewsYouTube
உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்
தற்போதைய செய்திகள்

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

Share:

உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களின் செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டி.பீ.கே.எல் மூன்று முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தேவையற்ற நடைமுறைகள் குறைக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐந்து அடி நடைபாதையில் மேசை, நாற்காலிகள் அமைக்க மாதம் 30 ரிங்கிட் அனுமதிக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறிய அளவிலான, கட்டமைப்பு சாராத புதுப்பிப்புகளுக்கு கிளை அலுவலகங்களிலேயே அனுமதி பெறும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுகாதாரக் குறைபாடுகளால் மூடப்படும் உணவகங்கள், முழுமையாக சுத்தம் செய்து விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருந்தால், ஆய்வுக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதிக்காமல், வணிகர்களுக்கு எளிதான சூழலை உருவாக்கும் என DBKL தெரிவித்துள்ளது.

Related News