Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது
தற்போதைய செய்திகள்

ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது

Share:

ஷா ஆலம் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, இரண்டாம் படிவ மாணவர் ஒருவரை, சக மாணவர் 10 செ.மீ நீளமுள்ள வளைந்த கத்தியால் கையில் குத்தியதாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சமாஹ், மாணவரின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான அம்மாணவர் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என்றும், அம்மாணவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இச்சம்பவமானது ஆபத்தான ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்தியதாக குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்