Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு
தற்போதைய செய்திகள்

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

Share:

தாபுங் ஹாஜி யாத்ரீகர்கள் நிதி வாரியம் தொடர்பான அரச விசாரணை அறிக்கை மீதான இன்றைய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு கோரியுள்ளார்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட குடலிறக்க பிரச்சினைக்காக நேற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், பிரதமர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்.

இந்நிலையில், அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், தொடர்ந்து உடலியக்க சிகிச்சை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் தாபுங் ஹாஜி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றக் கூட்ட விவாதங்களை தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தாபுங் ஹாஜி நிதி மற்றும் அதன் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

தாபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை அறிக்கையில், 2014 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை நிர்வாகம், முதலீடு மற்றும் நிதி மேலாண்மையில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும், நிறுவனத்தில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்