Sep 15, 2026
Thisaigal NewsYouTube
கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு
தற்போதைய செய்திகள்

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

Share:

மலேசியாவில் கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களை விநியோகிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 57 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 65 வழக்குகளுக்கு இது மிக நெருக்கமான எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆறு மாதங்களில் இந்த வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1,545 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், 13,957 லிட்டருக்கும் அதிகமான திரவ போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களை நேரடி தொடர்பின்றி அனுப்புவது கடத்தல் கும்பல்களின் வழக்கமான முறைகளில் ஒன்றாக மாறி வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்