Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

Share:

எலிக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பினாங்கு, ஜார்ஜ் டவுனிலுள்ள தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி ஒன்றின் உணவக வளாகத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பணிகளை உணவக ஒப்பந்ததாரர் முழுமையாக மேற்கொள்வதை உறுதி செய்வதாக பினாங்கு கல்வித் துறை உறுதியளித்துள்ளது.

இது குறித்து பினாங்கு மாநில கல்வி இயக்குநர் முகமட் ஜியாவுதீன் மாட் சாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரமற்ற சூழலில் உணவகம் இயங்கியதால், உணவுச் சட்டம் 1983 பிரிவு 11ன் கீழ் நேற்று வியாழக்கிழமை அந்த உணவகம் இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வளாகத்தில் எலிக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இன்று வெளியிட்டுள்ள தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அந்த உணவக உரிமையாளர்கள் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு