Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

Share:

2022 ஆம் ஆண்டு ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலின் போது பாரிசான் நேஷனல் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக அப்போதைய மந்திரி பெசார் ஹஸ்னி முகமட் இருந்தபோதிலும், சுல்தானின் ஒப்புதலோடு டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி, மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதால் ஜோகூர் மாநிலத்திற்கு இறுதியில் கூடுதல் நன்மைகளே கிடைத்துள்ளன என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், ஜோகூர் மாநிலத்திற்குப் பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்த ஒரு சிறந்த தலைவராகவே ஹஸ்னி முகமட் விளங்கினார் என்பதையும் அகமட் ஜாஹிட் ஹமிடி ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், மந்திரி பெசார் நியமனம் என்பது ஜோகூர் சுல்தானின் இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டது என்று குறிப்பிட்ட அவர், இதனை இணையம் வழியாகப் பொருட்கள் வாங்குவதோடு ஒப்பிட்டுப் பேசினார்.

நாம் இணையத்தில் ஒரு பொருளை வாங்கும்போது எதிர்பாராத விதமாக அதைவிட ஒரு சிறந்த பொருள் நமக்குக் கிடைப்பது போன்றதே இந்த மந்திரி பெசார் மாற்றமும் என்று கூறிய அகமட் ஜாஹிட், தற்போது ஒன் ஹஃபிஸ் காசியின் கீழ் ஜோகூர் அரசாங்கம் வலுவான தலைமைத்துவத்துடன் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Related News