வருகிற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர் ஆல்பர்ட் தே சூளுரைத்துள்ளார். 37 வயதான சர்ச்சைக்குரிய தொழிலதிபரான ஆல்பர்ட் தே, தமக்கு சில அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்த இறுதி முடிவை அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் மற்றும் ஜசெக தலைமையிலான அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று குற்றஞ்சாட்டிய ஆல்பர்ட் தே, இந்த ஏமாற்றமே வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதான தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத அவர், நெகிரி செம்பிலானில் தற்போது ஜசெக பொதுச்செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் வசம் இருக்கும் சென்னா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இலக்கு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.








