Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியக் கட்டடங்கள் நில நடுக்கத்தைத் தாங்க வல்லவை
தற்போதைய செய்திகள்

மலேசியக் கட்டடங்கள் நில நடுக்கத்தைத் தாங்க வல்லவை

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.30-

ஜோகூர், சிகாமட்டில் தொடர்ச்சியாக நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வரும் வேளையில் மலேசியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனைத்து புதிய கட்டடங்களும் நில நடுக்க எதிர்ப்பு தரநிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தில் நிர்மாணிக்கப்பட்டவையாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவின் கட்டட பாதுகாப்பு என்பது சிஐடிபி CIDB எனும் கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தால் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விளக்கினார்.

CIDB வழிகாட்டலின்படி 2016 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அனைத்து கட்டடங்களும் ரிக்டர் அளவுகோலில் 7 மற்றும் அதற்கு மேலான அளவிலான நில நடுக்கத்தைத் தாங்கக்கூடிய தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வர்ததகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட எல்லா வகையான உயர்மாடிக் கட்டடங்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். தவிர நடப்பு அரசாங்கத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து பிபிஆர் PPR அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்களும், அரசாங்க வீடமைப்புத் திட்டங்களும் தர மதிப்பீட்டு முறையைக் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

Related News