அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவியை தற்காத்துக்கொள்ளப் போவதில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து கட்சியில் பிளவு வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி கடுமையாகுமானால் கட்சி பிளவுப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அடிமட்ட உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட பெர்சத்து கட்சியின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் வெற்றிகரமாக வழிநடத்திக்கொண்டு இருக்கும் வேளையில் அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது கட்சியில் பிளவுகளுக்கும் பேதங்களுக்கும் வித்திடும் என்று அடிமட்ட உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.








