Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முடிவெட்ட 120 வெள்ளி கட்டணம் ! உரிமையாளருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

முடிவெட்ட 120 வெள்ளி கட்டணம் ! உரிமையாளருக்கு அபராதம்

Share:

சிகையலங்கார சேவைக் கட்டணங்களின் பட்டியலைக் காட்டத் தவறியதோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் முடி வெட்டுவதற்காக 120 வெள்ளி வசூலித்ததற்காக சமூக ஊடகங்களில் வைரலான ஒரு முடிதிருத்தும் கடை உரிமையாளருக்கு இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட 52 வயது நூருல் ஜன்னா அப்துல்லாவுக்கு நீதிபதி நோரினா சைனுல் அபிடின், இந்த தண்டனையை விதித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால், ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் பிந்தாங் இல் கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் நண்பகல் 12.26 மணிக்கு இந்தக் குற்றத்தை அந்தப் பெண்மணி புரிந்திருக்கிறார்.

Related News