Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பகாங் சுல்தானுக்கு  துணைப் பிரதமர் ஜாஹிட் மற்றும் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

பகாங் சுல்தானுக்கு துணைப் பிரதமர் ஜாஹிட் மற்றும் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் வாழ்த்து

Share:

மேன்மை தங்கிய பகாங் மாநில சுல்தான், சுல்தான் அப்துல்லா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் ஆகியோர் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணைப் பிரதமர் ஜாஹிட் ஹாமிடி, பகாங் சுல்தான் அவர்கள் இறைவனின் ஆசியோடு என்றும் நல்ல ஆரோக்கியத்துடனும், பகாங் மாநில மக்களின் நல்வாழ்விற்காகத் தொடர்ந்து நீதியோடும் ஆட்சி புரிய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். தெளலத் துவாங்கு! எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், தனது அமைச்சு அதிகாரிகள் மற்றும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் சார்பாகச் சுல்தானுக்கும், ஒட்டுமொத்த பகாங் அரச குடும்பத்தினருக்கும் தங்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும், நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளையும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related News