Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் நடந்த குற்றச்செயல்கள்: நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் நடந்த குற்றச்செயல்கள்: நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள்

Share:

தஞ்சோங் மாலிம், அக்டோபர்.15-

அண்மைய காலமாக பள்ளிகளில் நடந்து வரும் குற்றச்செயல்கள் குறித்த நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடைபெறும் என்று அரச மலேசிய போலீஸ் படை உறுதி அளித்து இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்களின் தொழில் ரீதியான நிபுணத்துவத்திற்கு ஏற்ப இந்த விசாரணைகள் யாவும் நடைபெறும் என போலீஸ் படை உறுதி அளித்துள்ளது.

இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள், நடப்பு சட்டத்திற்கு ஏற்ப நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்று போலீஸ் படை உத்தரவாதம் அளித்து இருப்பதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

காவல் துறையினருக்கும், சமூகத்திற்கும் இடையே எந்தப் பிரிவும் இல்லை என்ற முழகத்திற்கு ஏற்ப பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களில் குறிப்பாக பெற்றோரின் நம்பிக்கை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சைஃபுடின் தெரிவித்தார்.

பள்ளி பாதுகாப்பு அம்சத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் பள்ளிக்கு அனுப்புகின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பவும், அது குறித்து தீவிர கவனம் செலுத்துவதற்கும் உரிமை உள்ளது என்பதையும் சைஃபுடின் விளக்கினார்.

ஆனால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு பெற்றோர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது மிக முக்கியமானதாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News