கோலாலம்பூர், நவம்பர்.10-
வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக மொத்தம் 837 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை இணைய மோசடி குற்றங்களை மட்டுமே உள்ளடக்கியது என்றும், கிரிமினல் குற்றங்களை இது உள்ளடக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மலேசியர்கள் இது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்படுவது மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் முகமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவின் நற்பெயரைப் பாதுகாக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








