கோத்தா கெமுனிங், செப்டம்பர்.14-
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் ஷா ஆலாம் ரோட்டரி கிளப்பும் இணைந்து, சேஃப் தெ ஹார்ட் - இதயத்தைக் காப்போம் 5.0 என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச இதயப் பரிசோதனைகளை நடத்தியுள்ளது. இதனை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார்.

மக்களிடம் இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட து என பிரகாஷ் குறிப்பிட்டார். இங்கு பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு, ஈசிஜி, இரத்தப் பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், ஒருவரின் இதய நலனைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் அடுத்தக் கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இந்த இலவச பரிசோதனைக்கான செலவை, ஸ்கிம் ஜந்தோங் நெகிரி சிலாங்கூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் பிரகாஷ் அறிவித்தார்.









