Aug 6, 2026
Thisaigal NewsYouTube
Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை

Share:

டிச. 29-

தென் கொரியாவில் Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. சியோலில் உள்ள மலேசிய தூதரகம் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் தேவையான தகவல்களைச் சேகரித்து வருகிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை எந்த மலேசியரும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மலேசிய அரசாங்கம் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

தவி அல்லது தகவல் தேவைப்படும் மலேசியர்கள் சியோலில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இருக்கும் மலேசியர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற வழிவகை செய்கிறது.

Jeju Air 7C2216 விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சுவரை மோதியதால் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 181 பயணிகள் இருந்தனர். தற்போது வரையில் குறிந்தது 120 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்