Sep 23, 2026
Thisaigal NewsYouTube
லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’
தற்போதைய செய்திகள்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

Share:

ஜோகூர், கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் பாதையில் நேரிட்ட லாரி விபத்து காரணமாக, இ.டீ.எஸ் மின்சார ரயில் சேவைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதன் மேல் இருந்த கான்கிரீட் கட்டமைப்பு உடைந்து விழுந்து தண்டவாளப் பாதையைச் சேதப்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் விழுந்த கான்கிரீட் கட்டமைப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த வழித்தடத்திலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் ஜேபி சென்ட்ரல் மற்றும் கெம்பாஸ் பாரு நிலையங்களில் இருந்து மாற்றுப் பேருந்துகள் மூலம் கூலாய் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் தங்களின் இலக்குகளை நோக்கி ரயில்கள் மூலம் பயணத்தைத் தொடரலாம் என மலாயன் ரயில்வே நிறுவனமான கே.டீ.எம்.பி தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் ஜேபி சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய பாடாங் பெசார், கேஎல் சென்ட்ரல் மற்றும் பட்டர்வொர்த் ஆகிய இடங்களுக்கான மூன்று முக்கிய இ.டீ.எஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களின் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என்றும், பயணிகள் நிலையங்களில் உள்ள கே.டீ.எம்.பி ஊழியர்களை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்