புத்ராஜெயா, ஜூலை.14-
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பில் பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்களுக்கு நீதித்துறை உட்பட நடப்பு விவகாரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசியலமைப்புச் சட்டம் 125 ஆவது பிரிவு குறித்து முக்கியமாகத் தெளிவுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசு நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நீக்கம், சேவை விதிமுறைகள் குறித்து பிரதமர் முன்னிலையில் சட்டச் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் விளக்கம் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் மத்தியில் நடுவர் மன்றம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.








