சிபு, டிசம்பர்.05-
சிபு வட்டாரத்தில் ஜாலான் பூலாவ் டுடோங் அருகே, கடந்த புதன்கிழமை கடல்சார் பாதுகாப்புப் படை நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் போது, 2 லட்சத்து 30 ஆயிரத்து 850 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரி ஒன்றில், 9,000 லிட்டர் டீசல் இருப்பதை முதல் கண்டறிந்த போலீசார், அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது, அந்நபர் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக கடல்சார் பாதுகாப்புப் படை கமாண்டர் அப்துல் ரஹ்மான் மாட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மற்றொரு லோரி ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் 10,000 லிட்டர் டீசல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த இரு லோர் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








