Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியா – சீனா இளையோர் டிவேட் பயிற்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியா – சீனா இளையோர் டிவேட் பயிற்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புத்ராஜெயா, டிச.12-


மலேசிய இந்தியர்கள் உருமாற்றுப்பரிவான மித்ரா, 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கான மலேசியா – சீனா இளையோர் டிவேட் பயிற்சித்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை டிசம்பர் 5 ஆம் தேதி முதல் வரவேற்கிறது.

இந்த திட்டம் ,boot camp முகாம் வடிவில் 2 வார காலத்திற்கு நடத்தப்படும். இந்த இரண்டு வார கால பயிற்சி என்பது டிவேட் பயிற்சி குறித்து இளையோர்கள் குறிப்பிட்ட மற்றும் தரமான நடைமுறை திறன்களை வழங்குவதையும், உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும், புதிய கலாச்சாரங்களை நடைமுறைப்படுத்திக்கொள்ளவும், உலகக் கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்வதையும் நோக்கமாக கொண்டதாகும்.

குறிப்பாக சீனாவின் அனைத்துலக சர்வதேச நெட்வொர்க் கட்டமைப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு 2 வார காலம், முகாம் வடிவில் இந்த தொடக்கப் பயற்சி நடத்தப்படவிருக்கிறது.

இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மலேசிய இந்தியர்கள் 18 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

அரச மலேசிய போலீஸ் படை மற்றும் குடிநுழைவுத்துறையின் கருப்புப்பட்டியலில் இடம் பெற்று இருக்கக்கூடாது.

வழங்கப்படும் துறைக்கு ஏற்ப SKM படிநிலை 2 படிப்பின் போது, இளங்கலை பட்டப்படிப்பின் இறுதி தவணைக்காலம் வரை முழுமையாக பூர்த்தி செய்ததாக வேண்டும்.

2024-2025 ஆம் ஆண்டுகளுக்கான மலேசியா – சீனா இளையோர் TVET பயிற்சித்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழ் கண்ட துறைக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

Automotive (Electric Vehicle); Artificial Intelligent (AI); Digital Marketing; . E-Commerce; Industrial Automation; Mekatronic; Robotik; Electronic; . Semiconductor; Big Data; UAV Application (Dron); மற்றும் Tourism ஆகிய துறைகள்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப்பாரங்களை கீழ் கண்ட அகப்பக்கதில் Google படிவத்தில் பதிவேற்றம் செய்து வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு மித்ரா கேட்டுக்கொண்டுள்ளது.

https://forms.gle/tmSGtUc7aYocvdt69

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →