ஜெலெபு, அக்டோபர்.09-
நெகிரி செம்பிலான், ஜெலெபு, கம்போங் உலு ஜெலெபுவில் நிலப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் மேற்கொண்டிருந்த மண்வாரி இயந்திர ஓட்டுநர், அந்த கனரக வாகனம் கவிழ்ந்து, அதன் அடியில் சிக்கி மரணமுற்றார்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.35 மணியளவில் நிகழ்ந்தது என்று ஜெலெபு மாவட்ட போலீஸ் தலைவர் அஸிஸான் சையிட் தெரிவித்தார். ஓர் இந்தோனேசியரான அந்த மண்வாரி இயந்திர ஓட்டுநர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
31 வயதுடைய அந்த ஓட்டுநர், மண்வாரி இயந்திரத்தை மலை மீது செலுத்திக் கொண்டு இருந்த போது, அதனைக் கட்டுப்படுத்த தவறியதைத் தொடர்ந்து அந்த கனரக வாகனம் குடை சாய்ந்ததாக அஸிஸான் சையிட் மேலும் தெரிவித்தார்.








