ஜோகூர் பாரு, டிசம்பர்.03-
மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப்படை ரிசர்வ் அதிகாரி பயிற்சி மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடினின் மரணம் ஒரு கொலையே என்று சட்டத்துறை அறிவித்ததையடுத்து, இவ்வழக்கின் மேலதிக விசாரணை புக்கிட் அமான் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இனி புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ், இவ்வழக்கு விசாரணையானது நடைபெறும் என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் அர்ஷாட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஷாம்சுலின் மரணம் ஒரு கொலையே என சட்டத்துறை மறுவகைப்படுத்தியிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான யுடிஎம், மேலதிக போலீஸ் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தை நிலை நிறுத்துவதில் யுடிஎம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.








