Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

கோலாலம்பூர், இஸ்தானா நெகராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று புதன்கிழமை 5 நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இஸ்தானா நெகாரா, Singgahsana Kechil- லில் நடைபெற்ற இந்தச் சடங்கில் மலாயா தலைமை நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்ஸாவிற்கு பதவி நியமனக் கடிதம் வழங்கப்பட்டதையடுத்து கூட்டரசு நீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்களை மாமன்னர் வழங்கினார்.

Datuk Che Mohd. Ruzima Ghazali, Datuk Mohd Nazlan Mohd. Ghazali, Datuk Azimah Omar மற்றும் Datuk Collin Lawrence Sequerah ஆகியோரே கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்ற நான்கு நீதிபதிகள் ஆவர்.

இந்த நால்வரும், இதற்கு முன்பு, அப்பீல் நீதிமன்ற நீதிபதிகளாகச் சேவையாற்றியவர்கள் ஆவர்.

பதவி நியமனக் கடிதங்களை ஒப்படைக்கும் சடங்கில் கலந்து கொண்டவர்களில் அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார், சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் மற்றும் சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ டுசுகி மொக்தார் ஆகியோர் அடங்குவர்.

Related News