Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

Share:

சிப்பாங், டிசம்பர்.03-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல், 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களைச் சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அதன் மதிப்பு சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனையின் போது, சீனா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடமிருந்து போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களின் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்ட போது, அதனுள் போதைப் பொருட்களானது மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக கேஎல்ஐஏ சுங்கத்துறை இயக்குநர் ஸுல்கிஃப்லி முகமட் தெரிவித்துள்ளார்.

சீனப் பிரஜையின் பெட்டியில், மஞ்சள் நிறத்திலான பாக்கெட்டுகளில் கெத்தாமின் என்ற போதைப் பொருளும், தாய்லாந்துப் பிரஜையின் பெட்டியில், மாத்திரை வடிவிலான கொக்கேன் என்ற போதைப் பொருளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஸுல்கிஃப்லி முகமட் குறிப்பிட்டுள்ளார்.

சிகரெட், மதுபானங்கள், பட்டாசுப் பொருட்கள், போதைப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் கடத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி, அவை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் ஸுல்கிஃப்லி முகமட் தெரிவித்துள்ளார்.

Related News