Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் வேகமாக உயர்ந்து வருவதோடு, அவை தீவிர அச்சுறுத்தலாக மாறி வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குழந்தைகள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வருவதைப் போலீஸ் தரவுகளும் பகுப்பாய்வுகளும் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாகக் கண்காணித்ததன் மூலம், தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை சைஃபுடின் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம், குற்றங்களின் போக்குகள், அதிக அச்சுறுத்தல் தரக்கூடிய இடங்கள், பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளின் சுயவிவரங்கள் மற்றும் செயல்பாட்டு முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது என்றும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாலியல் பலாத்காரம், ஓரினச் சேர்க்கை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் ஆகியவை அடங்கும் என்று சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News