கெடா, கூலிம் மாவட்டத்தில் பெய்த கனத்த மழையில் பல இடங்கள் தீடீர் வெள்ளம் ஏற்பட்ட
நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தையும் பொருட்படுத்தாமல் கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் அவாங் தே லியான் ஓங் உடனடியாக உதவிக் கரம் நீட்டினார்.
வெள்ளத்தினால் கூலிம் தெராப் பகுதியில் பல வீடுகள் பாதிக்கப்பட்டதுடன் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில் போக்குவரத்து நிலைக்குத்தியது. காலை முதல் இரவு வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வரும் தே லியான் ஓங், தமது தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்துவிட்டு பாத்திக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலவரத்தை கேட்டு அறிந்தார்.
சில இடங்களில் வெள்ளம் கரைப்புரண்டோடிய நிலையில் பாதிக்கப்பட்ட சாலைகளை நேரில் பார்த்ததுடன் சாலைகளில் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் தே லியான் ஓங் செய்தார்.
கடந்த 10 ஆண்டு காலமாக கூலிம் வட்டார மக்களுக்கு வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதை ஒரு வேள்வியாக கொண்டுள்ள தே லியான் ஓங் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூலிம் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டால் இந்த திடீர் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


