Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் தாக்கப்பட்டது, ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் தாக்கப்பட்டது, ஐவர் கைது

Share:

தமது காதலியுடன் ஓர் உணவகத்தில் இரவு உணவு உட்கொண்டிருந்த ஆடவரை கும்பல் ஒன்று, பாராங் மற்றும் ஹாக்கி மட்டைகளை ஆயுதமாக பயன்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போ​லீசார் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர். சரவா, கூச்சிங்கில் நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் தங்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி, காதலியின் முன் அவமானப்படுத்தியதாக கூறப்படும் அந்த கு​ம்பல், பின்னர் அந்த ஆடவரை சரமாரியாக தாக்கியதாக போ​லீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போ​லீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை தாக்கியதாக நம்பப்படும் ஐவர் அடங்கிய கும்பலை வளைத்தப் பிடித்ததாக படாவான் மாவட்ட போ​லீஸ் தலைவர் லிம் ஜாவ் ஷியோங் தெரிவித்தார்.

Related News