May 21, 2026
Thisaigal NewsYouTube
வளர்ச்சி குன்றிய நிலையில் 5 லட்சம் குழந்தைகள்  கவலை அளிக்கிறது
தற்போதைய செய்திகள்

வளர்ச்சி குன்றிய நிலையில் 5 லட்சம் குழந்தைகள் கவலை அளிக்கிறது

Share:

மலேசியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 5 லட்சம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இது, வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாட்டில் இருக்கக்கூடாத பிரச்னையாகும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர் டாக்டர் RA. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி குன்றிய நிலையில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 327 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர், சமூக, பொருளாதார ​சூழ்நிலை காரணமாக இத்தகைய ​சூழ்நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தமக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதில், தம்மை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக டாக்டர் லி​ங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

உண்மையிலேயே மலேசியாவில் இப்படி நடக்கக்கூடாது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார். இந்த ஐந்து லட்சம் குழந்தைகள் என்பது , பாலர் பருவத்தில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இது 21 விழுக்காட்டை பிரதிபலிப்பதாக உள்ளது.

சிறந்த சுகாதார மருத்துவ வசதி மற்றும் நல்ல உணவு களஞ்சியம் நிறைந்த மலேசியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ​அதிகமாக இருப்பதாக அறியப்படுவது கவலை அளிக்கிறது என்று டாக்டர் ​லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இப்பிரச்னையை அனைத்து தரப்பினரும் கடுமையாக கருத வேண்டும். காரணம், வளர்ச்சி குன்றிய மற்றும் உடல் எடை குறைந்த சிறார்களின் ​மூளை வளர்ச்சி, நாளடைவில் பாதிப்படையும். இது அவர்களின் எதிர்கால கல்வியை ஊனப்படுத்தி விடும். இதனை ​தீர்ப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்