Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விஞ்சியது பி.எம்.கே.எஸ்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிரடி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விஞ்சியது பி.எம்.கே.எஸ்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிரடி அறிவிப்பு

Share:

மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியான 5.2 விழுக்காட்டை விஞ்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 5.7 விழுக்காடு அபார வளர்ச்சி கண்டுள்ளதாகத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 690 பில்லியன் ரிங்கிட் பங்களிப்புடன், இத்துறையின் உலகளாவிய ஏற்றுமதி 10.5 விழுக்காடு உயர்ந்து 214.5 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்று அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள 1.3 மில்லியன் நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், தங்களின் அமைச்சு, 15 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய ‘பவர் அப் 10கே’ திட்டத்தைச் செயல்படுத்துவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நாட்டின் 17 சுயேட்சை வர்த்தக ஒப்பந்தங்களை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள புதிய வழிகாட்டி கையேட்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related News