Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்பு

Share:

ஈப்போ, பந்தர் பாரு தம்புன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முகமது நஜிப் ஹம்சா தகவல் தெரிவித்துள்ளார். வீட்டின் ஒரு அறையில் கண்டெடுக்கப்பட்ட 46 வயதுடைய தாயும், 12 மற்றும் 11 வயதுடைய அவரது இரண்டு மகள்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடயவியல் சோதனையின் போது பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எந்தவொரு காயமோ அல்லது குற்றச் செயலுக்கான தடயமோ கண்டறியப்படவில்லை என்றும், இதனால் இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இறப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதோடு, விசாரணையை முழுமைப்படுத்த இன்று உடற்கூறாய்வு நடத்தப்படவுள்ளது. மேலும் விசாரணை முடியும் வரை பொதுமக்கள் யாரும் எந்தவொரு ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்று முகமது நஜிப் அறிவுறுத்தியுள்ளார்.

Related News