பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கை பழிவாங்கும் நோக்கம் தமக்கு இல்லை என்று தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டத்தோ ஜாருல் அகமட்டிடமிருந்து பெற்ற பணத்தில், 2 மில்லியன் ரிங்கிட்டை லிம் குவான் எங்கிடம் வழங்கியதாக ஒப்புக்கொண்ட ஞானராஜா, குவான் எங் தமக்கு எதிரி அல்ல என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு முதலமைச்சர் அந்தஸ்தில் உள்ளவர் அதிகாலை 3 மணிக்குத் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறிய தகவலில் எவ்விதப் பொய்யும் இல்லை என்றும், உண்மையை மட்டுமே தாம் கூறி வருவதாகவும் அவர் சாட்சியமளித்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








