பெண் குழந்தை ஒன்று சிறார் பராமரிப்பு மையத்தின் பணியாளரால் கடுமையாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பத்துகேவ்ஸ், Taman Samudera வில் நிகழ்ந்ததாகும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் Supt Noor Ariffin Mohamad Nasir தெரிவித்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அந்த குழந்தையின் உடலில் வீக்கங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் அந்த சிறார் மையத்தின் குழந்தை பராமரிப்பாளரான 21 வயது பெண் கைது செய்யப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி செலாயாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று Noor Ariffin விளக்கினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


