நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கெந்திங் ஹைலண்ட்ஹில் உள்ள கெசினோ சூதாட்ட மையத்தின் பாதுகாப்பு அறையிலிருந்து 46 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மென்பொருட்கள் களவாடப்பட்டது தொடர்பில் போலீசார் பத்து பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடபில் கெந்திங் நிறுவனம் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
பல்வேறு பகுதிகளில் இந்த பத்து பேரும் கைது செய்யப்பட்ட போதிலும் மேலுர் சிலர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தற்போது குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








