Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒன்பது மாடுள் மோதப்பட்ட விபத்தில் உதவி போலீஸ்காரர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒன்பது மாடுள் மோதப்பட்ட விபத்தில் உதவி போலீஸ்காரர் மரணம்

செத்தியூ, டிச.3-


4 வீல் டிரைவ் வாகனம் ஒன்று, ஒன்பது மாடுகளை மோதித் தள்ளி, / விபத்துக்குள்ளானதில் உதவி போலீஸ்காரர் ஒருவர், உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் ஜாலான் கோலத்திரெங்கானு – கோத்தாபாரு சாலையின் 57 ஆவது கிலோமீட்டரில் செத்தியூ என்ற இடத்தில் நிகழ்ந்தது.

கிளந்தான், பாசீர் மாஸ் பகுதியைச் சேர்ந்த 56 வயது சே முகமட் நாசிர் ஜப்பார் ஜப்பார் என்ற அந்த உதவி போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக செத்தியூ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஸைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

சாலையில் திடீரென்று கடக்க முற்பட்ட மாடுகளை மோதித்தள்ளிய டோயோட்டா ஹைலக்ஸ் வாகனம், பின்னர், எதிர்திசையில் நுழைந்த போது, எதிரே வந்த உதவி போலீஸ்காரரின் ஹோண்டா சிவிக் ரக காரில் மோதியது.

இதில் கடும் காயங்களுக்கு ஆளான உதவி போலீஸ்காரர் உயிரிழந்ததாக Mohd Zain தெரிவித்தார். இவ்விபத்தில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமுற்றன. Toyota Hilux வாகன ஓட்டுநர், எவ்வித காயங்களின்றி உயிர்தப்பினார். சில மாடுகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →