Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான 'தோற்றம் மற்றும் நற்பெயர் மேலாண்மை' பயிற்சி தொடக்கம்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான 'தோற்றம் மற்றும் நற்பெயர் மேலாண்மை' பயிற்சி தொடக்கம்

Share:

தொடர்புத்துறை அமைச்சின் கீழ் உள்ள துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான இப்தார் (IPPTAR) ஏற்பாடு செய்துள்ள “ஊடகத்தின் வாயிலாக தோற்றம் மற்றும் நற்பெயர் மேலாண்மை” எனும் மூன்று நாள் பயிற்சி வகுப்பு பினாங்கு, பேவியூ ஹோட்டலில் சிறப்பாகத் தொடங்கியது.

தகவல் அதிகாரி சசிதரன் லோகநாதன் ஒருங்கிணைப்பிலான இந்தப் பயற்சி நேற்று ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி நாளை 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

தமிழ் ஊடகச் சூழலில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கும், ஆக்கப்பூர்வமான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல் தொடர்பு நுணுக்கங்களை கையாளுவதற்கும் தேவையான நடைமுறை உத்திகள் மற்றும் திறன்களை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பயிற்சியின் முதல் நாள் அன்று RTM ஆங்கில செய்தி வாசிப்பாளரும், ஒளிபரப்பு ஊடகவிலாளரும், விரிவுரையாளருமான

டாக்டர் மோகனப்பிரியா சின்னராஜா, ஊடகவியலாளர்களுக்கான சுய தோற்றம் மற்றும் ஆளுமைத் திறன் குறித்து விளக்கினார். ஒரு ஊடகவியலாளர் தனது தோற்றத்தை எவ்வாறு தொழில்முறை சார்ந்ததாக பராமரிக்க வேண்டும், தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் தனது ஆளுமையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர் பயிற்சி அளித்தார்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தப்படும் இத்திட்டம் குறித்து டாக்டர் மோகனா கூறுகையில், "முதல் நாளில் தாம் உட்பட மேலும் இரண்டு பயிற்றுநர்கள் இணைந்து, ஊடகவியலாளர்களுக்கான நெறிமுறைகள், குரல் வளம், நற்பெயர் மற்றும் புகைப்படங்களை கையாளும் விதம் குறித்து விளக்கம் அளித்ததாக விவரித்தார்.

இந்தப் பயிற்சியில் / பங்கேற்பாளர்களின் சுறுசுறுப்பான செயல்பாடும், சிறந்த குழுப்பணியும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக டாக்டர் மோகனப்பிரியா தெரிவித்தார். மொத்தம் 24 பேர் பங்கேற்ற இன்றைய அமர்வில், பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் கருத்துகளைப் பகிர்ந்து, சுறுசுறுப்புடன் குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டது பாராட்டுக்குரியது என அவர் புகழ்ந்துரைத்தார்.

Related News