கோலாலம்பூர், ஜூலை.21-
நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கிய வேளையில் முன்னாள் பொருளாதார அமைச்சரரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி கலந்து கொள்ளவில்லை.
பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி கலந்து கொள்ளாதது குறித்து அவரின் உதவியாளர் உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ரஃபிஸியின் இருக்கை பின்வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.








