புத்ராஜெயா, ஜனவரி.20-
அடுத்த ஆண்டான 2027 முதல் படிவம் ஆறு மற்றும் மெட்ரிகுலேஷன் (Matriculation) உள்ளிட்ட ஒட்டுமொத்த பல்கலைக்கழக முன்நுழைவு கல்வி முறையையும் உயர்க்கல்வி அமைச்சு பொறுப்பேற்று நடத்தும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 'தேசிய கல்வித் திட்டம் 2026 முதல் –2035' தொடக்க விழாவில் பேசிய அவர், இந்த கல்வி முறைகளின் கீழ் பயிலும் மாணவர்கள் இனி அதிகாரப்பூர்வமாக உயர்கல்விப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
இதன் பொருள், படிவம் ஆறு மற்றும் மெட்ரிகுலேஷனில் நுழையும் மாணவர்கள் இனி முறையாக உயர்கல்வி அந்தஸ்தைப் பெறுவார்கள் என்று பிரதமர் விளக்கமளித்தார்.








