பேருந்தும், லோரியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் லோரி ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் அதிர்ஷ்டசவசமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் கிளந்தான், கோத்தாபாரு – குவா மூசாங் சாலையில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் லோரி ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுசைமி முகமது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பேருந்து 22 பயணிகளுடன் சிரம்பானை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், குவா மூசாங்கிலிருந்து கோத்தா பாருவை நோக்கி லோரி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுசைமி குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


