டிஏபி யை சேர்ந்தவர்கள், அரசியலில் இருந்து ஓய்வுப்பெறும் வரையில் பட்டங்கள், விருதுகள் பெறக்கூடாது என்பதை கட்சி ஒரு கொள்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருட்டின் னிடமிருந்து டத்தோ பட்டம் பெற்ற டிஏபியை இருவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கட்சியின் மத்திய செயலவை முடிவெடுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சபா மாநிலத் தலைவர் சான் ஃபோங் ஹின் மற்றும் மாநில செயலாளர் ப்ஹோங் ஜின் ஹே ஆகிய இருவரும் டத்தோ விருதை பெற்றள்ளனர். இந்த உயரிய விருதுகள் பெறுவது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தகவல் தெரிவித்த போது, கட்சியில் இருந்து ஓய்வுப்பெற்றவர்கள் மட்டுமே மாநில மற்றும் மத்திய அரசாங்கம் வழங்கக்கூடிய பட்டங்கள் மற்றும் விருதுகளை பெற முடியும் என்பதை அவ்விருவரிடம் தாம் விளக்கிவிட்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இனி இவ்விவகாரம் குறித்து முடிவெடுப்பது கட்சியின் உயர்மட்டக்குழுவின் பொறுப்பாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.








