Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா டாமன்சாரா தரவு மையத் திட்டம் வாபஸ் — மக்களின் குரலுக்கு வெற்றி
தற்போதைய செய்திகள்

கோத்தா டாமன்சாரா தரவு மையத் திட்டம் வாபஸ் — மக்களின் குரலுக்கு வெற்றி

Share:

கோத்தா டாமன்டமன்சாராவில் முன்மொழியப்பட்டிருந்த தரவு மைய மேம்பாட்டுத் திட்டம், தற்போது தொடரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டத்திற்கான திட்ட அனுமதி விண்ணப்பத்தை, மேம்பாட்டாளர் நிறுவனம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றமான MBPJ-விடம் இருந்து திரும்பப் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

எம்பிஜேபிஜே அதிகாரிகளிடமிருந்து இதுகுறித்த தகவலை தாம் அண்டையில் பெற்றதாக அவர் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி, கோத்தா டாமன்சாரா மக்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்படாததால், இந்தத் தரவு மையத் திட்டத்தை எதிர்ப்பதாக ரமணன் தெரிவித்திருந்தார்.

பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவர்களின் கருத்துகளும் கவலைகளும் கட்டாயம் கேட்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் எந்த புதிய பெரிய மேம்பாட்டுத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், முதலில் மக்களுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் ரமணன் கூறினார்.

Related News

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து