Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பிச்சையெடுக்க குழந்தைகள் கடத்தல்? கோலாலம்பூரில் சிக்கிய ஜோர்டான் கும்பல் — 17 குழந்தைகள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பிச்சையெடுக்க குழந்தைகள் கடத்தல்? கோலாலம்பூரில் சிக்கிய ஜோர்டான் கும்பல் — 17 குழந்தைகள் மீட்பு

Share:

கோலாலம்பூரில் பிச்சையெடுப்பதற்காக வெளிநாட்டு குழந்தைகளை பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

நேற்று நடத்தப்பட்ட எனும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில், மூன்று மாத கைக்குழந்தை முதல் 14 வயது வரையிலான 17 ஜோர்டான் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் எட்டு ஆண் குழந்தைகளும், ஒன்பது பெண் குழந்தைகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

புக்கிட் பிந்தாங் மற்றும் Chow Kit பகுதிகளில் ஏழு நடைபாதை இடங்கள் மற்றும் ஆறு தங்குமிடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையில், மனிதக் கடத்தல் மற்றும் குழந்தைகளை பிச்சையெடுக்கச் சுரண்டும் குற்றச்சாட்டில், 21 முதல் 49 வயதுடைய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் சமூக விசா மூலம் மலேசியாவுக்கு வந்து, குழந்தைகளை பிச்சையெடுக்க பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிச்சை எடுக்கும் நடவடிக்கையின் மூலம் ஒரு நாளில் மட்டும் 500 முதல் ஆயிரம் ரிங்கிட் வரை இந்த கும்பல் வசூலித்து இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து