Sep 15, 2026
Thisaigal NewsYouTube
விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய பலம் — பல்வேறு அமைப்புகள் இணைந்து அதிரடி நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய பலம் — பல்வேறு அமைப்புகள் இணைந்து அதிரடி நடவடிக்கை

Share:

நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் அனைத்துலக நுழைவாயில்களின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகளை மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் வரவேற்றுள்ளது.

தேசிய குடிநுழைவு கட்டளை மையம் மற்றும் உள்துறை, போக்குவரத்து அமைச்சுகளின் தொழில்நுட்பக் குழு மூலம் பல்வேறு அமலாக்க அமைப்புகளின் பொறுப்புகள் தெளிவுபடுத்தப்படுவதால், எல்லைப் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் தேவையான பயணிகளுக்கு உடல் சோதனையை மீண்டும் மேற்கொள்வதுடன், கையடக்க உலோக கண்டுபிடிப்புக் கருவிகளும் பயன்படுத்தப்படும்.

மேலும், போலீஸ் மற்றும் சுங்கத் துறையின் கே 9 மோப்ப நாய் பிரிவுகளும் விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைக்கப்படவுள்ளன.

கேஎல்ஐஏ மற்றும் பிற விமான நிலையங்களிலும் மேம்பட்ட பாதுகாப்பு பரிசோதனை உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

Related News