Sep 6, 2026
Thisaigal NewsYouTube
கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரம் எங்கே நிற்கிறது? போலீஸ், எஸ்.பி.ஆர்.எம்  பதில் சொல்ல கோபிந்த் சிங் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரம் எங்கே நிற்கிறது? போலீஸ், எஸ்.பி.ஆர்.எம் பதில் சொல்ல கோபிந்த் சிங் வலியுறுத்தல்

Share:

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ‘கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரத்தின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் ஆகியோர் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதமே அமைச்சரவை முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதன்பின்னர் விசாரணை நடத்த போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் கூறினார்.

விசாரணைக்கு உதவக்கூடிய முக்கிய நபர்களான தொழிலதிபர் விக்டர் சின் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனரா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சந்தை நம்பிக்கையை பாதிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால், இதில் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை அவசியம் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து