Sep 15, 2026
Thisaigal NewsYouTube
2030க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைப்பு
தற்போதைய செய்திகள்

2030க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைப்பு

Share:

மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதை 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 10 விழுக்காடாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரம்பு 13 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் சிம் ட்ஸீ ட்ஸின் தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்கள் மலிவான வெளிநாட்டு தொழிலாளர்களை மட்டும் சார்ந்திருக்காமல், தானியக்கத் தொழில்நுட்பம், நவீன உற்பத்தி முறைகள் மற்றும் அதிக மதிப்பு கொண்ட தொழில்துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு தொழிலாளர் சார்பைக் குறைப்பதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்க முடியும் என அவர் கூறினார்.

தொழில்நுட்ப முதலீடுகள், தானியக்க வசதிகள், மானியங்கள் மற்றும் மென்படிக் கடன்கள் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் சிம் ட்ஸீ ட்ஸின் தெரிவித்தார்.

Related News